14 &15-06-2019 இசை மற்றும் கலை நிகழ்ச்சி / சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கு அனுமதி…
வணக்கம்!
தற்போது நோர்வே தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தில் உள்ள இசைக்கருவிகளின் உதவியோடு இளையோர்கள் வாரத்தில் பல நாட்கள் பயிற்சிசெய்து வருகிறார்கள்.
உபகரணங்களையும் வசதிகளையும் இசையாசிரியர்கள் மற்றும் இசையார்வலர்கள் உபயோகித்துக்கொள்வதற்கு அனுமதி உண்டு.
எதிர்வரும் 14ம் 15ம் வெள்ளி, சனி நாட்களில் Stovner bydel, Stovner senterக்கு வெளிப்பகுதியில் இசை மற்றும் கலை நிகழ்ச்சியொன்றினை நடத்துகிறது. இந்நிகழ்வில் எமது இளையோரும் பங்கு கொள்கின்றனர்.
இந்நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.06) மாலையும் சனி முழுநாளும் (15.06) நடைபெறும்.
இதன்போது எமக்கு சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அச்சிற்றுண்டிச்சாலையால் கிடைக்கும் வருமானத்தினைக்கொண்டு நாம் எமது இளையோருக்குத் தேவவையான இசைக்கருவிகளை கொள்வனவுசெய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலே கூறப்பட்ட சிற்றுண்டிச்சாலையை நடத்துவதற்கு எமக்கு பின்வரும் உதவிகள் தேவைப்படுகின்றன.
1. சிற்றுண்டிச்சாலை விற்பனையாளர்கள்.
2. உணவு தயாரிப்பதற்கான உதவி.
3.சிற்றுண்டிச்சாலைக்கான ஏனைய உதவிகள்.
தமிழ்ச்சங்கம் தனது பங்களிப்பினையும் அவசியமான உபகரணங்களையும் வழங்கும்.
ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் 400 55 720
ஒற்றுமையே எமது பலம்!
நன்றி