நோர்வே தமிழ்ச்சங்கத்தின் முதற்கட்டக வெள்ள அனர்த்த உதவிகள் தாயகத்தில் இன்று 26. 12. 2018 அன்று வழங்கப்பட்டன


நோர்வே தமிழ்ச்சங்கத்தின் முதற்கட்டக வெள்ள அனர்த்த உதவிகள் தாயகத்தில் இன்று 26. 12. 2018 அன்று வழங்கப்பட்டன

நோர்வே தமிழ்ச்சங்கம் தாயகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிதிக்காக தமது நிதியில் இருந்து 10.000 குறோணர்களையும், நோர்வே வாழ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 25000 குறோணர்களையும் (ஏறத்தாள 700.000 இலங்கை ரூபாய்கள்)

இன்று, எமது முதற்கட்ட உதவிகள், இதுவரை உதவிகள் சென்றடையாத முரசுமோட்டை, புளியம்பொக்கனை கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் இடம்பெயர்ந்துள்ள 360 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்தும் எமது இணை செயற்பாட்டாளர்கள் மேலும் இரண்டு கிராமங்ககளுக்குச் சென்றுகொண்டுள்ளனர்.

இத்துடன் சில புகைப்படங்களை இணைத்துள்ளோம். நாளை எமது இணையத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட செய்திகள் வெளியிடப்படும்.

மக்களினால் வழங்கப்பட்ட நிதிக்கான அனைத்துப்பற்றுச்சீட்டுக்களும், இப்பணம் எவ்வாறு நிவாரணங்களுக்கு உபயோகிக்கப்பட்டது என்பதுபற்றியதுமான அனைத்து விடயங்களும் விரைவில் மக்களுக்கு அறியத்தரப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

நிர்வாகம்
நோர்வே தமிழ்ச் சங்கம்
2018/2019

புகைப்பட தொகுப்பு

Share this post