மகிழ்தின மெய்வல்லுனர் போட்டி – 2022 – JAFFNA
நோர்வே தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், மெய்வல்லுனர் போட்டிகளை இலகுவாக பதிவு செய்யும் முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் ஒன்றினை பரிசோதிக்கும் நோக்கில் 08.01.2022 அன்று யாழ் மாநகரில் அரியாலை சனசமூக மைதானத்தில் நாட்டின் வடபகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மகிழ்தின மெய்வல்லுனர் போட்டி ஒன்று வெகு விமர்சையாக நடை பெற்றிருந்ததது.
இந்த விளையாட்டு நிகழ்வுக்கு யாழ் மாநகர சபை கௌரவ முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
மென்பொருள் பற்றிய சிறு அறிமுகம்
இந்த மென்பொருளானது விளையாட்டுப்போட்டிகளின் போது மனித வலு நேரத்தினைச் சிக்கனப்படுத்தி மிக வேகமான முறையிலும், துல்லியமான முறையிலும் செய்ய முற்றுமுழுதாக இலத்திரனியல் முறையில் வடிவமைக்கப்பட்டதாகும்.எனவே இங்கு பதிவுகளில் ஏற்படும் தகவல்கள் 99% மிகச்சரியானதாகவே அமையும். அதுமட்டுமின்றி பங்குபற்றும் வீரவீராங்கனைகளின் தகவல்களும்,அவர்களுடைய சாதனைகளும் பதிவுசெய்யப்பட்டு அவை எந்நேரத்திலும் பார்க்ககூடிய வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நாம் ஒரு விளையாட்டுக்கு சிறந்த வீரரை தெரிவு செய்வதற்கு இந்த மென்பொருளானது பெரிதும் உதவியாக இருக்கும்.
உதாரணமாக X எனும் நீளம் பாய்தல் வீரரை தெரிவு செய்யும்போது அவர் எமக்கு அறிமுகமற்றவர் எனின் இந்த மென்பொருள் ஊடாக பின்வரும் சில விடயங்களை அறியலாம்
* X இனுடைய அடிப்படை விபரங்கள்(வயது, நாடு,மொழி)
* முன்னர் விளையாடிய கழகங்கள்
* பாய்ந்த நீளங்களின் பதிவுகள்.
* அதிகூடிய பாய்ச்சலின் நீளம்.
இந் நிகழ்வில் 10 தொடக்கம் 30 வயதினருக்கு இடையிலான பல பிரிவுகளில் பந்து எறிதல், ஈட்டி எறிதல், குண்டு போடுதல் போன்ற மைதான நிகழ்வுகளும் 80M, 100M, 200M, 400M போன்ற சுவட்டு நிகழ்வுகளும் 4×200M, 4×400M, கயிறு இழுத்தல் போன்ற குழு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இவ் விளையாட்டு நிகழ்வுகளில் பின்வரும் பாடசாலைகளில் இருந்து 300 க்கும் அதிகமான வீர,வீராங்கனைகள் கலந்து பரிசில்களைப் பெற்றிருந்தனர்.
பங்குபற்றிய பாடசாலைகள் விபரம்
*யாழ் கனகரத்தினம் மகா வித்தியாலயம்
*யாழ் பல்கலைக்கழக வீர வீராங்கனைகள்
*யாழ் பரியோவான் கல்லூரி
*யாழ் புனித பத்திரிசிரியார் கல்லூரி
*யாழ் கொழும்புத்துறை இந்துமகா வித்தியாலயம்
*முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட நான்கு பிரபல பாடசாலை வீர வீராங்கனைகள்
*பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள்.
இந்த விளையாட்டுப்போட்டிகளில் எமது அழைப்பை ஏற்று நீண்ட தூரத்திலிருந்தும் குறித்த நேரத்துக்கு வருகை தந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து சிறப்பித்த வீர வீராங்கனைகளுக்கும், எமக்கு போட்டிகளை நடாத்த மைதானத்தை வழங்கிய அரியாலை சனசமூக நிலையத்துக்கும், அந்நேரத்தில் பணியாற்றிய மென்பெருள் தொழிநுட்பவியலாளர்களுக்கும், போட்டிகளின் நடுவர்கள், ஒழுங்கமைப்பாளர்களாக செயற்பட்ட அரியாலையூர் இளைஞர்களுக்கும் எமது நோர்வே தமிழ் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்