எம்மைப்பற்றி
நோர்வே தமிழ்ச்சங்கமானது 1979ம் ஆண்டுதொடக்கம் நோர்வேவாழ் தமிழ்மக்களுக்கு தனது வேவையினை வழங்கிவரும் சனநாயக்க்கட்டமைப்பைக்கொண்ட சமூக நிறுவனமாகும்.
நாம் பொதுக்குழுவின் வழிகாட்டலின் கீழ், நோர்வே நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்கிவருகிறோம்
எமது சங்கத்தில் தற்போது 610 அங்கத்தவர்களும், விளையாட்டுக்கழகத்தில் 110 அங்கத்தவர்களும் உள்ளனர். நாம் வருடாந்தம் பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆண்டுவிழா ஆகிய விழாக்களை நடாத்துவதோடு நீச்சற்போட்டிகள், உள்ளரங்க வெளியரங்க காற்பந்தாட்டப்போட்டிகள், அனைத்து விளையாட்டுக்களையும் உள்ளடக்கிய வருடாந்த சங்கமம் விளையாட்டுப்போட்டிகள் ஆகிய நிகழ்வுகளையும், சமூகத்திற்கு அவசியமான கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் ஆகியவற்றையும் நடாத்துவது குறிப்பிடத்தக்து. எமது அலுவலகத்தில் அங்கத்தவர்களுக்கான சதுரங்க பயிற்சிவகுப்புக்களும், கரம் விளையாடும் வசதியும் உண்டு.
நாம் பின்வரும் நோக்கங்களின் அடிப்படையிலேயே இயங்கிவருகிறோம்.
- நோர்வே வாழ் தமிழர்கள் மத்தியில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல்
- நோர்வே வாழ் பல்லின சமூகங்களுக்கிடையிலான உறவுகளைப் பேணிதல்
- தமிழர் கலை, கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றைப் பேணிப் பரிமாறுவதுடன், பல்லின சமூகத்தினரின் கலை, கலாச்சாரங்களை உள்வாங்குதல்
- நோர்வே வாழ் தமிழர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதுடன் உலகில் மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்தல்
எமது சங்கமானது பொதுக்குழுவின் வழிகாட்டலின் கீழ் சனநாயகமுறையில், நோர்வே நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்கிவரும் ஒரு நிறுவனமாகும்.
Mission
எங்கும் எதிலும் சேவை
Vision
ஒற்றுமையே பலம்