அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் சிறுகதை, கவிதைப் போட்டிகள் – 2019

Posted by: admin Category: Cultural, News Comments: 0

அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் சிறுகதை, கவிதைப் போட்டிகள் – 2019

நோர்வே தமிழ்ச் சங்கம்  40வது ஆண்டு மாணிக்கவிழா

அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் சிறுகதை, கவிதைப் போட்டிகள் – 2019

சிறுகதை 

19 வயதுக்கு மேற்பட்டோர்

கருப்பொருள்:

  • போருக்கு பின்னரான சமூக அவலம்
  • தமிழர் பண்பாடு, வாழ்வியல் சிக்கல்
  • நில அபகரிப்பு

19 வயதுக்கு உட்பட்டோர்

கருப்பொருள்:

  • போதை பொருள் பாவனை
  • கல்வித்தடை, பொருளாதார சுமை
  • குடும்ப உறவுச்சிக்கல்கள்

கவிதை

19 வயதுக்கு மேற்பட்டோர்

தலைப்பு:

  • அந்நாள் அது போலே இனி வருமா
  • தேவதைகளின் பாடல்
  • எனது நிலமும் நிலவும்

19 வயதுக்கு உட்படடோர்

தலைப்பு:

  • குயிலே… குயிலே எந்தன் குறையறிவாயோ
  • இரை மீட்டல்
  • நெருப்பாகி நின்றவள்

போட்டியாளர்களது கவனத்துக்கு:

  1. கையெழுத்துப்பிரதியாயின் A4 தாளில் 8 பக்கங்களுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும்.
  2. ஏற்கனவே வெளிவராத புதிய எழுத்துருக்களாக இருக்கவேண்டும்.
  3. 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர், அல்லது உப அதிபரிடம் தமது ஆக்கத்தை உறுதிப்படுத்தும் ஒப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
  4. மின்னஞ்சலூடாக அனுப்புவதாயின் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். tsangam40.eluthuru@gmail.com
  5. பாமினி எழுத்தை 12 எழுத்து அளவில் உபயோகிக்கவும்.
  6. pdf மற்றும் doc ஆகிய இரு வடிவங்களிலும் அனுப்பவும்
  7. தபால் மூலம் அனுப்புவதாயின் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

Norway Tamil Sangam
Stovner Vel
Fjellstuveien – 26
0982 Oslo
Norway

  1. ஆக்கங்கள் வந்து சேரவேண்டிய இறுதித் திகதி 03.2019
  2. தங்கள் ஆக்கங்களோடு தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, தபால்முகவரி என்பவற்றை இணைப்பது விரும்பத்தக்கது.
  3. போட்டி முடிவுகள் சித்திரை இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும்.

முதலாவது பரிசுத்தொகை –            25,000 ரூபாய்

இரண்டாவது பரிசுத்தொகை –       15,000 ரூபாய்

மூன்றாவது பரிசுத்தொகை –           10,000 ரூபாய்

 

கலைப்பிரிவு போட்டிகள் 2019

போட்டிகள் அறிவித்தல் விண்ணப்பமுடிவு போட்டி பரிசளிப்பு
திகதி
சிறுகதை – இலங்கை        U19/O19 01.02.2019 31.03.2019 04.05.2019
கவிதை – இலங்கை           U19/O19 01.02.2019 31.03.2019 04.05.2019
கவிதை – நோர்வே பொது 01.03.2019 31.03.2019 04.05.2019
குறுந்திரைப்படம் – சர்வதேசம் 01.03.2019 31.08.2019 26.10.2019
காட்சியும் கானமும் – சர்வதேசம் 01.03.2019 31.08.2019 26.10.2019
நிழற் படம் – நோர்வே வாழ் தமிழர் 01.04.2019 31.08.2019 26.10.2019
நாடக எழுத்துரு – சர்வதேசம் 01.02.2019 31.05.2019 26.10.2019
பரத நாட்டியம் – குழு ஐரோப்பா 01.03.2019 31.05.2019 07/08.09.2019 07/08.09.2019
கருநாடக இசை தனி – நோர்வே 01.02.2019 31.03.2019 05.05.2019 05.05.2019
Freestyle நடனம் – குழு ஐரோப்பா 01.03.2019 31.05.2019 07/08.09.2019 07/08.09.2019
மெல்லிசை – குழு ஐரோப்பா 01.02.2019 31.03.2019 05.05.2019 05.05.2019

Share this post